என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ் அதிகாரிகள்"
லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஐ.ஜி. முருகன் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டியை அமைத்து தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.
இந்த புகாரை விசாரித்த கமிட்டி, ஐ.ஜி. மீதான புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து புகாருக்கு ஆளான ஐ.ஜி. முருகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த பாலியல் புகார் மீது 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, வாதாடினார்.
அப்போது அவர் ‘ஐ.ஜி.க்கு எதிராக போலீசில் புகார் செய்யாமல், தான் பணியாற்றிய துறையின் இயக்குனரிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு புகார் கொடுத்ததால், நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனது’ என்று கூறினார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு அது போன்று நாம் செயல்படுகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறி உள்ளார். எனவே அதன்படி நடக்க வேண்டும் என்பதால் என்னுடைய சேம்பர் உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவு துறைக்கு உத்தரவிடுகிறேன்.
இந்த வழக்கை பொருத்த வரையில் பெண் போலீஸ் அதிகாரி, ஐ.ஜி.மீது கொடுத்துள்ள பாலியல் புகார் பற்றி விசாரணை நடத்த கூடுதல் டி.ஜி.பி. லட்சுமி பிரசாத் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கிறேன்.
இந்த கமிட்டியில் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணம்மாள், கனகா, டி.எஸ்.பி. ராமதாஸ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வல்ச ராகுமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். 2 வாரத்துக்குள் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த பாலியல் புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டால் இந்த கமிட்டி ஐகோர்ட்டை நாடலாம்.
பாலியல் புகார் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டப்படி வழக்கை விரைவாக நடத்த வேண்டும். ஐ.ஜி. முருகன் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளதால் பணி விதிகளின்படி தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண் அதிகாரிகள், ஊழியர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் விதமாக அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகங்களின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஐ.ஜி.முருகன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #MadrasHC
மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 5 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4-ந் தேதி கடத்தி சென்றனர். இதையடுத்து சக போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கதி என்ன என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சிடாகவ்ரோ நகரில் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் 5 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் என்பதும், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. #Mexico #PoliceMurder
குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம் அருகே செயல்பட்டு வந்த குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் அதிகாரிகளின் பக்கம் சி.பி.ஐ.யின் கவனம் திரும்பியது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் போலீஸ் அதிகாரிகள் பட்டியலை சேகரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
புழல் உதவி கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
குட்கா ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் சென்னையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அனைவரும் சி.பி.ஐ. பிடியில் சிக்கினர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பணியாற்றி வரும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் வெளி மாவட்டத்தில் உள்ள டி.ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை ஒரே நாளில் நடத்தப்படவில்லை. 3 பேரையும் தனித்தனி நாட்களில் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது 3 அதிகாரிகளும் அளித்த தகவல்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட 2 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது. சென்னை திருமங்கலத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.
இப்போது பணியில் இருக்கும் டி.ஜி.பி. ஒருவரும், டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் கமிஷனர் ஒருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவர்கள் இருவருக்கும் கீழே பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே குட்கா முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் சென்னையில் பணியாற்றிய மேலும் 3 அதிகாரிகளிடமும் விரைவில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற உள்ளது.
ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியும், டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
குட்கா விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும் யாரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #GutkaScam #CBI
காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடத்தினை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில்ரமானி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது அவரின் கீழ் பணியாற்றும் காவல் துறையினர் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். அவர்களை இப்படித்தான் விசாரணை செய்ய வேண்டும், இப்படித்தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். மனித உரிமைகளை மீறக் கூடாது. அவர் மீது கூறப்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டு, பொன்.மாணிக்கவேல் என்பதால் அவர் மீது விசாரணை நடத்தாமல் இருக்க முடியாது. அவர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
விசாரணையின் போது தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை எடுத்துரைக்கும்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில் ரமானி பேசியதாவது:-
புதிய சார்பு நீதிமன்ற கட்டிடம் அமைப்பின் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.
வழக்கு தொடுத்தவர்கள் பயன்பெறும் வகையில் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய உதவிகளை உயர்நீதிமன்றம் செய்து கொடுக்கும். இதனால் வழக்கு தொடுத்தவர்கள் பயன் பெறுவர். புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதன் மூலம் இளம் வழக்கறிஞர்கள் நிறைய அனுபவங்களை பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமலா, பவானி சுப்பராயன், மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா, மாவட்ட நீதிமன்றம்-2 நீதிபதி கருணாநிதி, மற்றும் நீதிபதிகள் கீதாராணி, பாக்கியஜோதி, மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் வி.சோமசுந்தரம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், படுநெல்லிதயாளன், அதிமுக வழக்கறிஞர் அணி கே.ரவிச்சந்திரன், ஜி.எம்.சி. ஜீவரத்தினம்
பார் அசோசியேசன் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சுப்பிரமணி, லாயர் அசோசியேசன் தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் கார்த்திகேயன்,
அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சத்தியமூர்த்தி, மூத்த வழக்கறிஞர்கள் டி.சி.வரதராஜன், டோமேசன், ஒய்.தியாகராஜன், கேதார் நாத், தாங்கி பழனி, துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #CVShanmugam #PonManickavel
பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிக்காலம் முடிந்து விட்டதால், அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியிலும் பொன் மாணிக்கவேல் தீவிரமாக உள்ளார்.
இந்த நிலையில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் சூப்பிரெண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் இங்ஸ்லிதேவ், ஆனந்த், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட 13 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர். இன்று மேலும் சில அதிகாரிகள் புகார் மனு அளித்தனர்.
“தனித்தனி விசாரணை அதிகாரிகள் இருந்தும் பொன் மாணிக்கவேல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. 300க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தான் சுட்டிக்காட்டும் நபர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும் என அவர் சொல்கிறார். காணாமல் போன சிலைகளில் பலவற்றை மீட்பதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. ஆனால் கைது செய்ய நிர்பந்திக்கிறார். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றார் இளங்கோ. #IdolWing #PonManickavel
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
குறிப்பாக குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், மின்னல் வேகத்தில் இப்படியொரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா அல்லது அரசியலா அல்லது மேலிடத்துக் கட்டளையா என்பதெல்லாம் கேள்விக்குறியாகியிருக்கிறது.
குட்கா டைரியில் இடம் பெற்றுள்ள உயர் போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆகவே, குட்கா மாமூல் வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என்றும், டைரியில் இடம் பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சி.பி.ஐ. என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன்.
மக்களுக்கு சுகாதாரக் கேடுகளையும், உயிருக்கு பேராபத்தையும் ஏற்படுத்தும் குட்கா விற்பனை “மாமூல்” விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சி.பி.ஐ. விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சி.பி.ஐ. மதிக்க வேண்டும்.
அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத விசாரணை கோரி தி.மு.க.வின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிட நேரிடும் என்றும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு குட்கா வியாபாரிகள் தங்கு தடையின்றி அதனை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான குடோனில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருட்கள் சிக்கின. ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதனை ஆய்வு செய்து பார்த்தபோது ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது சிக்கிய டைரி ஒன்றே, குட்கா ஊழலை முழுவதுமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரையில் லஞ்சம் கொடுக்கப்பட்டதும், யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சப்பணம் கைமாறியுள்ளது என்கிற விவரமும் அதில் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இதுபற்றி தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயரும் டைரியில் இடம் பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, போலீஸ், அரசு அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்னர் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னரும் குட்கா வழக்கு எந்த அசைவும் இல்லாமலேயே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது அதிரடி ஆபரேஷனை தொடங்கினர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையுடன் விட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குட்கா அதிபர் மாதவராவிடம் திரட்டப்பட்ட தகவல்கள் இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.
குட்கா விற்பனைக்காக ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும், போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, கலால் துறை உணவு பாதுகாப்புதுறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றியும் மாதவராவ் புட்டு, புட்டு வைத்தார். இதனை தொடர்ந்து குட்கா ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளும் சிக்கினர்.
மத்திய கலால் துறை அதிகாரியான கே.என்.பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு குடோன் அதிபர் மாதவராவ், பங்குதாரர்களான உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குட்கா வழக்கில் மாதவராவே முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவரே, யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை பட்டியல் போட்டு அதனை செயல்படுத்தி உள்ளார். இதனை ஒப்புக் கொண்டுள்ள அவர் அப்ரூவராக மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து குட்கா விவகாரத்தில் அடுத்தடுத்து மேலும் பல திருப்பங்கள் ஏற்பட உள்ளன. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக இந்த கைது நடவடிக்கை போலீஸ் அதிகாரிகள் மீதும் பாய்கிறது.
குட்கா முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட கால கட்டத்தில் புழல் உதவி கமிஷனராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னன் மன்னன் மதுரை ரெயில்வே டி.எஸ்.பி.யாகவும், இன்ஸ்பெக்டர் சம்பத் தூத்துக்குடியிலும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ‘‘விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயரும் சிக்கி இருப்பது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களில் கமிஷனர் ஜார்ஜ் ஓய்வு பெற்றுவிட்டார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரிடமும் நேற்று முன்தினம் நடந்த சோதனையின் போதே சி.பி.ஐ. அதிகாரிகள் முழு அளவிலான விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். தேவைப்பட்டால் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனால் சி.பி.ஐ.யின் அடுத்த குறி யார் மீது? என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. நெருங்கி இருப்பது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GutkaScam
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இதனை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஓட்டல்கள், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரும் மக்களிடமும் பிளாஸ்டிக் பொருட்களை உள்ளே கொண்டு வரக்கூடாது என சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் கடந்த 3-ந் தேதி முதல் போலீஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்படுகிறது.
உணவு சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் கழிவுகளை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பாகவே அதிகாரிகள் கொட்டியுள்ளனர். அவை கடந்த 4 நாட்களாக மலைபோல் குவிந்துள்ளது.
4 வழிச்சாலையில் குப்பைகள் கிடப்பதால் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்துகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் மட்டும் அக்கறையின்றி செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
1. லாவண்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.
2. நமசிவாயம், துணை காவல் கண்காணிப்பாளர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, மதுரை.
3. உலகநாதன், காவல் ஆய்வாளர், கம்பம் வடக்கு காவல் நிலையம், தேனி மாவட்டம்.
4.கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர், வி-7 நொளம்பூர் காவல் நிலையம், சென்னை பெருநகர காவல்.
5. சரவணன், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, நாகப்பட்டினம் மாவட்டம்.
6. கிளாஸ்டின் டேவிட், காவல் ஆய்வாளர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல்.
7. மகேஷ்குமார், காவல் ஆய்வாளர், பி-3 தெப்பக்குளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், மதுரை மாநகர்.
8. சித்ராதேவி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, தேனி மாவட்டம்.
9. ஜெயந்தி, காவல் ஆய்வாளர், இருப்புப் பாதை காவல் நிலையம், ஜோலார்பேட்டை.
10. சுரேந்தர், காவல் உதவி ஆய்வாளர், கண்டோன் மென்ட் காவல் நிலையம், திருச்சி மாநகரம்.
இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்- அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
1. மகேஷ்குமார் அகர்வால், காவல் ஆணையர், மதுரை மாநகரம், தற்போது காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
2. முத்தரசி, காவல் துறை உதவி தலைவர், (நிர்வாகம்), காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.
3. கண்ணன், காவல் கண்காணிப்பாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
4. ராஜ்நாராயணன்,காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, அயல் பணி இயக்குநர் அலுவலகம், சென்னை.
5. ஆனந்தராஜன், காவல் உதவி ஆய்வாளர், திட்டச்சேரி காவல் நிலையம், அயல்பணி, நாகப்பட்டினம் மாவட்ட தனிப்பிரிவு.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.
மேற்கண்ட விருதுகள், முதல்-அமைச்சர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்கூறிய காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும். #IndependenceDay #TNCM #EdappadiPalanisamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்